சென்னை:

மிழக பாஜக தலைவர் எல்.முருகன் , காஞ்சி மட பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 6 மாதமாக மாநிலத் தலைவர் இன்றி தள்ளாடிக்கொண்டிருந்தது தமிழக பாரதியஜனதா கட்சி. தலைவர் பதவிக்கு கட்சி தலைவர்கள் இடையே கடுமையான போட்டி எழுந்த நிலையில், தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

சுமார் 6 மாத இழுபறிக்கு பிறகு,  தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் என்பதை பாஜக தலைமை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்தது

அதைத்தொடர்ந்து முருகன் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து ஆசி பெற்ற நிலையில், இன்று காஞ்சிபுரம் வந்து சங்கர மத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியை சந்தித்து ஆசி பெற்றார்.

 

BJP, KanchiMutt

[youtube-feed feed=1]