சென்னை:

`நீட்’ தேர்வு முடிவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அரசியல் செய்கிறார் என்று  ‘நீட்’ ஆய்வாளர் ராம்பிரகாஷ் கூறி உள்ளார்.

மீபத்தில் வெளியான மருத்துவ முதுநிலை நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அவசரப்பட்டு அதிரடி அறிக்கை வெளியிட்டார்.

அதில்,  நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு பின்பு தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்புக்கு அதிக அளவில் தமிழக மாணவர்கள் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த காலங்களில் மத்திய தொகுப்புக்கு தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்வானார்கள் என்பதே உண்மை. இந்த நிலை தற்போது மாறி இருக்கிறது. சமீப காலத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை.

`நீட்’ தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு, அதன் பயன்களை சாமானியர்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். நீட் தேர்வை அரசியலுக்கான கருவியாகப் பயன்படுத்த வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

தமிழிசையின் அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியது. உண்மை தெரியாமல் தமிழிசை பேசுகிறார் என்று விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  நீட் தேர்வு குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்துவரும் ராம்பிரகாஷ் கூறியதாவது,

முதுநிலைத் தேர்வு முவுகளை வைத்து, நீட் தேர்வில் தமிழகம் முன்னணியில இருக்கு என்ற முடிவுக்கு வர முடியாது.  இந்த முதுநிலைநீட் தேர்வுலா தேர்வானவட்ஙக, இளநிலை மருத்துவ படிப்புக்கு தேர்வாகும்போது நீட் என்ற தேர்வே கிடையாது… ஆனால், அவர்கள் பல வருடங்களாக மருத்துவ பணியாற்றியபிறகு தற்போது தேர்வு எழுதி முதுகலை படிப்புக்கு தேர்வாகி உள்ளார்கள் என்று கூறினார்.

இதை பார்க்கும்போது,  அப்போ நீட் எழுதாம மருத்துவர் ஆனவங்க. ஆக நீட் எழுதாமலேயே புத்திசாலியான மருத்துவர் ஆகலாம்  என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.  இதனாலதான் பிளஸ்-2 முடிச்சுட்டு மருத்துவம் படிக்க வர்ற மாணவர்களுக்கு நீட்  தேர்வுவேண்டாம் என்று வலியுறுத்தி வருவதாகவும், நீட் குறித்து  தமிழிசையும், அரசியல் பண்றாங்க என்றும் தெரிவித்துள்ளார்.