சென்னை:

மிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் சபை முடித்து வைக்கப்படும். பின்னர் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.

இந்நிலையில், காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இன்று மாலை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இன்று பிற்பகல் சட்டமன்ற சிறப்பு கூட்டம்  மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின்போது,  காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜல்லிக்ககட்டுக்காக சட்டசபை சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.