சென்னை:
ட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.

அதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று முதல் டிசம்பர் 15- ஆம் தேதி வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் தொடர்பாக நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. ஜனவரி 5-க்குள் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு, ஜனவரி 20- ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.