கன்னியாகுமரி:
தேர்தல் முடிந்ததும் திமுக வேட்பாளர் மக்கள் நீதி மய்யத்தில் இணைவார் என்று நடிகை கஸ்தூரி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக அரசியகட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில, பிரச்சாரத்தில் ஈடுபடும் பலரும் தங்களது எதிர்கட்சிகளையும், ஆளும் கட்சியையும் விமாசித்து வருகின்றனர். அநத வகையில் கன்னியாகுமரி தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியான சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பி.டி.செல்வகுமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை கஸ்தூரி தேர்தல் முடிந்ததும் திமுக வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.
முன்னாக அங்குள்ள முருகன் கோவிலில் சாமி தரிசணம் செய்த அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனறும், அரசியல் பேசியது இல்லை என்றும், கூறிய அவர் சாதி மதத்தை கடந்து, அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற செல்வக்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய அவர், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முதலில், விஜயகாந்த் கட்சியில் (தேமுதிக) இருந்தார். அதன்பிறகு எம்ஜிஆர் அதிமுக, அடுத்து அதிமுக சென்ற அவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
தற்போது தேர்தல் முடிந்தவுடன் இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவார் என்று உங்களது சிட்டிங் எம்எல்ஏ இப்படி இருக்கிறார். இதில் அதிமுக தரப்பில் தளவாய் சுந்தரம் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. வெறும் முயற்சி மட்டும்தான் செய்கிறார்.அவரது முயற்சிக்கு நாம் உற்சாகம் தான் தரவேண்டும். அவருக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அப்படிதான் செய்ய வேண்டும். ஏன் என்றால் உங்களது வெற்றி வேட்பாளர் உங்களது கண்முன் நிற்கிறார் என்று சமத்துவ மக்கள் கட்சியில் வேட்பாளர் பி.டி.செல்வக்குமாரை கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கன்னியாகுமரி தொகுதி மக்கள் திமுக மற்றும் அதிமுகவுக்கு வாக்களிக்க போவதில்லை என்றும், பி.டி.செல்வக்குமாருக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.