மண்ணச்சநல்லூர்:
எம்எல்ஏவானால் இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று திமுக வேட்பாளர் கதிரவன் வாக்குறுதிஅளித்தார்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன், மணியம்பட்டி கிராமத்தில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள், வேட்பாளருக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி களித்தனர். இதைதொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள புலிவலம், மணியம்பட்டி, பெரமங்கலம், குருவிக்காரன்குளம், தெற்குபள்ளம், அண்ணாநகர், உடையான்பட்டி, பெரியகாட்டுகுளம், சின்னகாட்டுகுளம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுவீடாக நடந்து சென்று வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

எம்எல்ஏவானால் இலவச மருத்துவம் வழங்கப்படும் என்றும், அரசு ஆரம்ப பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவேன். சமயபுரத்தில் இருந்து நாமக்கல் வரை பேருந்து வசதி ஏற்படுத்தி தருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.