கோவை

மிழக விவசாய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட நேர்காணல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தமிழக விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.   இதற்கான நேர்காணல் கடந்த 11 ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.   ஆனால் நிர்வாக காரணங்களுக்காக அந்த நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது திருத்தப்பட்ட நேர்காணல் அட்டவணையைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  அதன்படி ஓய்வு பெற்ற ராணுவத்தினர் ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் பிப்ரவரி 23 காலை நேர்காணல் நடைபெறுகிறது.  மேலும் அன்று மதியம் விளையாட்டு வீரர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

அதன் பிறகு 24 ஆம் தேதி அன்று தொழிற்கல்வி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களும் 25 மற்றும் 26 ஆம் தேதி அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.  இவை அனைத்தும் நேரடியாக நடைபெறுகிறது.

பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட நேர்காணல் இணையம் மூலமாக 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இட ஒதுக்கீடு இணையம் மூலம் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.  மார்ச் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நேரடியாகச் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட உள்ளன.

இதன் பிறகு இரண்டாம் கட்ட நேர்காணல் 11 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்த்தல் 15 முதல் 17 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன.  மூன்றாம் கட்டமாக வெளிநாடு வாழ் மாணவர்களுக்கான நேர்காணல் 20 ஆம் தேதி காலையும் தொழில் ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதே நாள் பகலிலும் நடைபெற உள்ளன.

அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் மூன்றாம் கட்டமாக மார்ச் 22 முதல்24 வரை நேரடியாகச் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மூன்றாம் கட்ட இட ஒதுக்கீடு பட்டியல் 26 ஆம், தேதி இணையம் மூலமாக வெளியாக உள்ளது,