சென்னை,
தமிழக அமைச்சர்கள் 3 பேர் இன்று தலைநகர் டில்லி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
ஜெ.மறைவுக்கு பிறகு தமிழகத்தை ஆண்டுவரும் எடப்பாடி தலைமையிலான அரசு முதுகெலும்பில்லாமல் இருப்பதாக தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா எதிர்த்து வந்த பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கு எடப்பாடி தலைமையிலான அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.
மத்திய அமைச்சர் ஒருவர் சென்னை வந்து தலைமை செயலகத்தில் ஆய்வு செய்தது போன்ற வற்றால் தமிழக அரசு செயலிலந்து உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், மத்திய அரசின் அழைப்பின் பேரிலேயே தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அடிக்கடி டில்லி செல்வதாகவும், அப்போது அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து எச்சரிக்கப்படுவ தும், அதன் காரணமாக பொம்மை அரசாக, மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மோடியை சந்திப்பது, தமிழக அமைச்சர்கள் அடிக்கடி டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பது போன்றவைகளால், தமிழகத்திற்கு எந்தவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை.
மாறாக, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மட்டுமே அமுக்கி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் 3 பேர் திடீரென டில்லி சென்றுள்ளனர். இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்திக்கின்றனர்.
அமைச்சர் தங்கமணி, சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு அருண்ஜேட்லியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா கூறப்படுகிறது.
அப்போது, தமிக வறட்சி நிவாரணம் தொடர்பாக அருண் ஜெட்லியிடம் கோரிக்கை வைக்க இருப்பதாக தமிழகஅரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தொடர்ந்து அமைச்சர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் தலைநகர் செல்வதும், வருவதும், அமைச்சர்களின் நிர்வாகம் குறித்து கோட்டை அதிகாரிகளிடையே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.