மதுரை: புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் அவசரமாக நீக்கப்பட்டதுஏன் என்று கேள்வி எழுப்பி உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி காங்கிரஸ் அரசை சிதைக்கவே தமிழிசை பொறுப்பு ஆளுநகராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புதுச்சேரியில், மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், திடீரென கிரண்பேடி நீக்கப்பட்டு, பொறுப்பு ஆளுநகராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இன்று பொறுப்பேற்ற தமிழிசை, சட்டத்திட்டத்துக்கு உட்பட்டே செயல்படுவேன் என்று கூறினார்.
இந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண் பேடியை அனுப்பியது போல் தற்போது தமிழிசை அனுப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.