சென்னை: தமிழ்நாடு அரசு இந்திய ரூபாயின் குறியீட்டை மாற்றி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இந்திய ரூபாயின் குறியிடு ‘₹’ உருவானது எப்படி என்ற விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளது.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பணத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் உள்ளன. .நாணயக் குறியீடுகள் என்பது குறிப்பிட்ட நாணயப் பெயர்களை எழுத்து வடிவில் காட்ட விரைவான மற்றும் எளிதான வழியாகும். இது ஒரு வசதியான சுருக்கெழுத்து, வார்த்தைகளை எளிதாக ஒரு கிராஃபிக் சின்னத்தால் மாற்றுகிறது.

சர்வதேச அளவில் பரிவர்த்தனை செய்யப்படும் நாணயங்களை உலக நாணயங்கள் என்கிறோம்,  உலகளாவிய கையிருப்பு அடிப்படையில் அமெரிக்க  நாணயங்கள் டாலர் என்றும், ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட 18 நாடுகளின் நாணயங்கள்  யூரோ  என்று அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும்  இதுவரை அதிகம் பயன்படுத்தப்படும் நாணயங் கள்  டாலர் மற்றும் யூரோ என்பதை யாரும் மறுக்க முடியாது. இதைத்தொடர்ந்து,  வகையில் பல நாடுகள் தங்களுக்கென நாணயங்களுக்கான குறியீடுகளை வெளியிட்டு அதை அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக  கொண்டுள்ளது.

அமெரிக்காவின் பணத்திற்கு டாலர், இங்கிலாந்து நாட்டின் பணம் பவுண்டு, ஜப்பானுக்கு யென், ஐரோப்பிய நாடுகளில் யூரோ எனக் குறியீடுகள் உள்ளன. அதுபோல் இந்திய ரூபாய்க்கும் குறியீடு (Indian Rupee Sign ) உள்ளது. இந்தியா வெளியிட்ட நாணயக்குறியீடுதான் ‘₹’.  ரூபாய் என்பதற்கு பதில் இந்த குறியீட்டை பயன்படுத்தினாலே போதுமானது. இதுவே தற்போது ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பதியப்பட்டு, புழக்கத்தில் உள்ளது.

  இதன் “மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களின் வரிசையில் ரூபாயின் குறியீடு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட பட்ஜெட் லோகோவில் இந்திய நாணய குறியீட்டை மாற்றி, ரூ. என வெளியிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ரூபாயின் குறியிடு உருவானது எப்படி?

இந்தியாவில் நாம் பயன்படுத்தும் பணத்தினை ரூபாய் என்று அழைக்கிறோம். இந்திய ரிசர்வ் வங்கியே ரூபாயை வெளியிடுகிறது.இந்தியாவில் பெரும்பாலும் ருபீ, ரூபாய்,ரூபயி போன்ற வார்த்தைகளில் அழைக்கின்றனர். அதேசமயத்தில்  மேற்கு வங்காளம், அசாம், ஒரிசா  போன்ற  மாநிலங்களில்  வாழும் மக்கள்  பணத்தை டாக்கா என்ற பெயரில் அழைக்கின்றனர்.

முன்னதாக உலகளவில் இந்திய ரூபாய்  Rs. அல்லது INRஎன்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்பட்டு வந்தது. INR என்பது இந்திய ரூபாயின் ஐ எஸ் ஓ 4217 குறியீடு.

இந்த குறியிட்டை சர்வதேச அளவில் மாற்றும் வகையில்,  அப்போதைய  பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு புதிய குறியீட்டை தேர்வு செய்ய  2009 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று  புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதற்காக நாடு முழுவதும் ஒரு போட்டியை அறிவித்தது. இந்த  போட்டியில் 3331 நபர்கள் கலந்து கொண்டு ரூபாய்க்கான குறியீடுகளை தயாரித்து அனுப்பினர்.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வடிவங்களில் குறியீடுகள் போட்டியில் கலந்து கொண்டன. இதில் 5 குறியீடுகள் தேர்வு செய்யப்பட்டன.  இந்த 5 குறியீடுகளில் சிறந்த குறியீடு ஒன்றை 2010 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று மத்தியஅரசு    இந்த குறியீட்டை தேர்வு செய்தது.  அது  தமிழர் உதயகுமார் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த குறியீடானது, தேவநாகரி (இந்தி) எழுத்தான ( ` –`RA) ““மற்றும் ரோமன் எழுத்தான R (ஆர்) ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் “ர” வர்க்கத்தின் குறியீட்டையும்,  ஆங்கில எழுத்து RR” ஐயும் பிரதிபலிக்குமாறு அமைந்துள்ளது.

மற்ற நாடுகளின் குறியீட்டில் உள்ளதுபோல ஒரு படுக்கை கோடு (Sleeping Line) சேர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் R என்ற எழுத்தின் பாதியில்  அதன்மீது  இரண்டு  கோடுகள் போட்டது  போன்று இருக்கிறது.

இந்த புதிய குறியீட்டை வடிவமைத்தவர் மும்பை ..டி முதுகலைப் பட்டதாரி மாணவர் டி.உதயகுமார் (D.Udayakumar) ஆவார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது பெருமைக்குறியது. இதற்காக உதயகுமாருக்கு 2.5 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்தப் புதிய குறியீடுக்கு மத்திய அமைச்சரவை 15,ஜூலை 2010 இல் ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக அறிவிப்பை, அப்போதைய காங்கிரஸ் அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி  வெளியிட்டார்.

இந்தப் புதிய   குறியீடு இந்திய ரூபாயை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு மொழிகளில் ஒரே மாதிரியாக தெரியப்படுத்துவதற்காக வழிவகை செய்யப்பட்டது.. அதன்படி முதலில், அண்டை நாடுகளான பாகிஸ்தான்,  நேபாளம், இலங்கை, இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், அது உலகம் முழுவதும் சென்றது.  இதைத்தொடர்ந்து, இந்தியா ரூபாயின் குறியீடு     சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது. இந்த குறியீடானது, ர  இந்திய ரூபாயின் தனித்துவத்தை நிலைநாட்டு வதாக உள்ளது.

யார் இந்த உதயகுமார்

இந்திய ரூபாயின் குறியீட்டை வடிவமைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் 10, அக்டோபர் 1978 ஆம்  ஆண்டில் பிறந்தார். இவர் ரிஷிவந்தியம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் ஆவார். உதயகுமாரின்  தாயார் பெயர்  ஜெயலட்சுமி. இவரின் பெற்றோர்கள் சென்னை  தண்டையார்பேட்டை யில் வசித்து வருகின்றனர்.

உதயகுமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லாசேட்லியர் உறைவிட  ஜூனியர் பள்ளியில் பிளஸ்டூ வரை படித்தார். பின்னர் சென்னை  ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார். அதன் பிறகு  மும்பை  ஐ.ஐ.டி யில்  தொழில் டிசைனிங் பிரிவில் முதுகலைப் பட்டம் பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி பட்டமும் பெற்றார்.

சர்வதேச அளவில்  இந்திய  ரூபாய் என்றாலே  நினைவிற்கும்  வரக்கூடிய குறியீட்டை உருவாக்கியவர் ஒரு தமிழன் என்பது தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்தது. இது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, இந்திய  ரூபாய்க்கான   குறியீடு  ஜூலை மாதம்  2010 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் புதிய குறியீடு 6மாதத்திற் குள் இந்தியா விலும், 24 மாதங்களுக்குள்  சர்வதேச அளவிலும் புதிய குறியீடு அறிமுகம்  செய்யப்பட்டது. வங்கிகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த “Rs” என்பதற்குப் பதிலாக புதிய குறியீட்டினை உடனே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் , இந்திய தபால்துறை புதிய குறியீடு கொண்ட அஞ்சல் தலையை 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 3 அன்று வெளியிட்டது.

இந்திய பட்ஜெட் உரையின்போது உரையாற்றி அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இனிவரும் 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் குறியீடு இடம்பெறும் என 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று அறிவித்தார்.  இதைத்தொடர்ந்து,  2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்த 10,100,500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் இந்திய ரூபாயின் குறியீடு முதன்முதலாக அச்சிடப்பட்டது. இதுதவிர புதிய குறியீட்டை அச்சில் வெளியிடவும், கணினி பயன்பாட்டுக்கு உதவும் வகையில் கணினியின் விசைப்பலகையிலும் , கணினி மென்பொருள்களிலும் இடம் பெறச் செய்யப்பட்டு புழக்கத்தில் உள்ளது.

இந்திய ரூபாயின் அடையாளக் குறியீடு தேர்வு செய்யப்பட்டது கண்டு செய்தியளார்களிடம் பேசிய  உதயகுமார் , என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன்  என்றார். ரூபாய்க்கான  அடையாளக் ‘குறியீட்டை  இந்திய  எழுத்தில் வடிவமைத்து இருந்தன். அதுவே போட்டியில் வெற்றிபெற  காரணமாக இருக்கலாம் எனவும் அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இனி தமிழில் ரூ என்றோ ரூபாய் என்றோ போட வேண்டியதில்லை. அதேபோல் ஆங்கிலத்தில் Rs (ஆர் எஸ்) என்றும் போட வேண்டியதில்லை. இந்திய ரூபாயின் குறியீட்டை போட்டாலே போதும். இந்த குறியீடு இந்தியாவின் நாணய குறியீட்டை சர்வதேச அளவில் புகழ்பெறச் செய்துள்ளது.