டில்லி

மிழ் எழுத்தாளர் இமையம் தனது செல்லாத பணம் நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது  பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுகிறது.   இந்த விருது மாநில மற்றும் தேசிய அளவில் வழங்கப்படுகிறது.   இந்த விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் தாமிரப்பட்டயம் அளிக்கப்படுகிறது.

இந்த விருது இந்திய மொழிகள் 24 மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது.  அவ்வகையில் தற்போது பிரபல தமிழ் எழுத்தாளர் இமையம் இந்த விருதைப் பெற்றுள்ளார்.  அவர் எழுதிய செல்லாத பணம் என்னும் நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழில் சோ. தர்மனின் சூல் (நாவல்), எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் (நாவல்), கவிஞர் இன்குலாப்பின் காந்தள் நாட்கள் கவிதை தொகுப்பு, பூமணியின் அஞ்ஞாடி (நாவல்), ஜோ டி குரூஸின் கொற்கை (நாவல்), டேனியல் செல்வராஜின் தோல் (நாவல்), சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் உள்ளிட்ட பல படைப்புகளுக்கு இசாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளன.