வடமாநில மைல்கற்களில் தமிழ் எழுதப்படுமா? பொன்னாருக்கு பழ.கருப்பையா கேள்வி

Must read

சென்னை,

மிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள ஆங்கில எழுத்து அழிக்கப்பட்டு இந்தியில் ஊரின் பெயர் எழுதப்பட்டு வருகிறது.

அதுபோல வடமாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஊரின் பெயர்கள் தமிழில் எழுதப்படுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார் பழ.கருப்பையா.

மத்தியஅரசின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தி எழுத்துக்கள்மீது தார்பூசி அழிக்கப்படும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார். இதற்கு பதில் அளித்த தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்னார், திமுகவினர் தங்கள் முகத்தில் தார் பூசிக்கொள்ளட்டும் என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் மூத்த அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

”வடமாநிலத்தவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள மைல் கற்களில் ஆங்கிலப் பெயர்களை அகற்றிவிட்டு, இந்தியில்  பெயர்கள் எழுதப்பட்டால், தமிழர்கள் மற்றும் தென் மாநிலத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாநிலங்களில் உள்ள மைல் கற்களில் தமிழிலும், பிற தென்னிந்திய மொழிகளிலும் ஊர் பெயர்கள் எழுதப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

”உலக மனிதர்கள் முழுவதும், தமிழகத்தில் வாகனங்கள் ஓட்டுகின்றனர். அதனால், ஆங்கிலத்தில் ஊர்ப் பெயர்கள் எழுதப்படுவது மிகவும் அவசியம். ஆங்கிலத்தில் எழுதுவது தான் சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

“இந்தியாவில் 18 மொழிகளும் தேசிய மொழிகளாக இருக்க வேண்டும். இல்லையெனில், அந்தந்த மாநில மொழியும், ஆங்கிலமும் முக்கியத்துவம் பெற வேண்டும். ஒரு மொழி மட்டும்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல”

வடநாட்டினருக்கு வால் பிடிப்பதை விட்டு விட்டு தென் மாநிலத்தவர்கள் நலன் குறித்து பொன் ராதாகிருஷ்ணன் பேச வேண்டும் என்றும்  பழ.கருப்பையா மேலும் கூறினார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் திமுக அமைச்சராக இருந்தபோதுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பொன்னார் கூறுவது  ” காங்கிரஸ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட சில முடிவுகளையே தற்போதைய ஆட்சியும் பின்பற்றினால், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் வேர் ஊன்ற முடியாது” என்று குறிப்பிட்டார்.

மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த டி. ஆர். பாலு இந்தி பொதுமொழியாக இருக்க வேண்டும் என்பதை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. அக்காலகட்டத்தில் ஒன்றிரண்டு இடங்களில் இந்தியில் எழுதப்பட்டதை திருத்தி எழுத வேண்டும் என்று டி. ஆர். பாலு அப்போதே வலியுறுத்தினார்.

வட மாநிலத்தவர்களை கருத்தில் கொண்டு மைல் கற்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்ட தாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையது அல்ல என்றும், பொது மொழியான ஆங்கிலத்தில்தான் ஊர் பெயர்கள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More articles

Latest article