சென்னை: இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி பிகாம், பிஏ, பிசிஏ, பிபிஏ, பி.காம் போன்ற இளங்கலை படிப்பின்போது தமிழ்பாடமும் கட்டாயம் படிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  உயர் கல்வித் துறை  முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை. அதனால், இனி அனைத்து பல்கலைக்கழகங்களிலும், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும்.

ஏற்கனவே இந்த பாடப் பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத் தேர்வு உள்ளது. இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் தமிழ் பாடத் தேர்வு இருக்க வேண்டும். இந்த நடைமுறை  நடப்பு கல்வியாண்டில் வரக்கூடிய செமஸ்டர் தேர்வுகளில் இருந்து அமலுக்கு வருவதாகவும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்  தமிழ் மொழித் தேர்வை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.