சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் இன்று மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தவிர்த்து இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்த தமிழ் டிவி சேனல்களை அனைவரும் பாராட்டினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக இளைஞர்கள் வரலாறு காணாத வகையில் எழுச்சி மிகு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த சமயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர்.

இதனால் டிவி சேனல்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் பேட்டி மற்றும் போராட்டத்தை நேரலை செய்வார்கள். இதனால் இளைஞர்களின் போராட்டம் திசை திரும்பி விடுமோ என்ற அச்சம் எழுந்தது. இது குறித்த வருத்தங்களும், எச்சரிக்கைகளும் சமூக வளைதளங்களில பரவ தொடங்கியது.

மக்கள் மத்தியில் இந்த செய்தி தீயாக பரவ தொடங்கியது. இதையடுத்த மாணவர்களின் போராட்டமே முக்கியம். நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்துக்கு ஊடக வெளிச்சம் வேண்டாம். நாங்கள் இந்த போராட்டத்தை மவுன போராட்டமாக நடத்துகிறோம் என்று   நடிகர்சங்கத் தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்வை டி.வி மற்றும் இணையதள நண்பர்கள் விடியோ கவரேஜ் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இதன் அடிப்படையில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்தும் தமிழ்ச் செய்தித் சேனல்கள் நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. செய்தியை மட்டுமே பதிவ செய்துவிட்டு, தமிழகம் முழுக்க உணர்வுபூர்வமாக நடைபெற்றுவரும் மக்களின் எழுச்சி போராட்டங்களையே தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள். தொலைக்காட்சிகளின் இந்த நடவடிக்கை மக்களிடம் பலத்த பாராட்டை பெற்றுள்ளது.

ஆனால், இதற்கு நேர் மாறாக வடமாநில டிவி சேனல்கள் ஜல்லிக்கட்டு எதிரான நபர்களின் கருத்தை வெளியிட்டு வருகின்றனர். எனினும் தமிழர்களின எழுச்சிக்கு மத்தியில் வடமாநில சேனல்களின் திட்டம் தவிடு பொடியாகி வருகிறது.