சென்னை:

நாளை தமிழ்ப்புத்தாண்டு தொடங்குவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்துக்களின் வருடப்பிறப்பான சித்திரை 1ந்தேதி நாளை தொடங்குகிறது. தற்போது  நடைபெற்று வரும் ஹேவிளம்பி வருடன் இன்றுடன் முடிவடைகிறது. நாளை விளம்பி வருடம் பிறக்கிறது.

இதையொட்டி தமிழ் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

உலகின் மூத்தகுடி எனும் பெருமை கொண்ட தமிழ் மக்கள், ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சித் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி, வலிமையும் வளமும் மிக்க தமிழ்நாட்டை படைக்க ஒன்றுபட்டு உழைக்குமாறு மக்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இனிய புத்தாண்டில், தமிழர்கள் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்றும், நலமும் வளமும் பெருகட்டும்..

இவ்வாறு  அவர்  தெரிவித்துள்ளார்.