டில்லி: இந்தியாவின் மிகப்பெரும் நன்கொடையாளர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷிவ் நாடார் முதலிடம் பிடித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விளம்பரமின்றி பல கோடிகளை வாரியிறைத்து, பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.

‘ஹுருன் இந்தியா’ நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘எடெல்கிவ் ஹுருன் என்று  இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2022ஐ வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவின் மிகப்பெரும் நன்கொடையாளர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. ஏற்கனவே விப்ரோ நிறுவனம் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஹெசிஎல் மென்பொருள், வன்பொருள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும்  தமிழ்நாட்டின் தென்கோடியைச் சேர்ந்த ஷிவ் நாடார் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இநத் ஆண்டு,  ஷிவ் நாடார் 1,161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, இந்திய நன்கொடையாளர் பட்டியலில்  முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நாள் ஒன்றுக்கு, சராசரியாக 3 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி 484 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் இடம் வகித்து வந்த பிரேம்ஜி, இந்த ஆண்டு 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில் உலகின்  பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்துள்ள  கவுதம் அதானி, ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் 190 கோடி ரூபாய் மட்டுமே  நன்கொடையாக வழங்கி உள்ளார்-

மேலும், நாட்டில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை கொடுத்தவர்கள் எண்ணிக்கை 15 என்றும்,  50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக  நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் 20 பேரும், 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை கொடுத்த பட்டியலில்  43 பேரும்  இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டு களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை வழங்குபவர்கள் எண்ணிக்கை, இரண்டிலிருந்து 15 ஆக உயர்ந்து உள்ளது.

36 வயதாகும்  ‘ஜீரோதா’ நிறுவனத்தின் நிஹில் காமத் மிக இள வயது நன்கொடையாளராக பட்டியலில் இடம்பெற்றுள்ளார் இவர், 100 கோடி ரூபாய்க்கும் மேல் நன்கொடை கொடுத்துள்ளார்.

இந்த நன்கொடையாளர் பட்டியலில், ஆறு பெண் நன்கொடையாளர்கள்  உள்பட  இந்த ஆண்டில் புதிதாக 19 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 832 கோடி ரூபாயை வழங்கி உள்ளனர். ரோஹினி நிலேகனி 120 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, பெண்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

   கடந்த 17ந்தேதி (அக்டோபர்) HCL நிறுவனத்தின் தலைவர் திருமதி ரோஷினிநாடார் மல்ஹோத்ரா, சிவநாடார் அறக்கட்டளையின் தலைவர் ஷிகர்மல்ஹோத்ரா ஆகியோர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாட்டில் HCL நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.