சென்னை:

மிழ்நாட்டின் புதிய சின்னமாக தமிழ்மறவன் பட்டாம்பூச்சியை ஏற்கனவே தமிழக அறிவித்திருந்த நிலையில், அது தொடர்பாக உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் சின்னமாக திருவில்லிபுத்தூர் கோபுரம் உள்ளது அனைவரும் அறிந்தது. அதுபோல தமிழகத்தின் சிறப்புமிக்க சின்னங்களாக  பனைமரம், வரையாடு,  மரகதப்புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி போன்றை இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த  ஜூலை மாதம் 1ந்தேதி,  ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி இனத்துக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழ்மறவன் பட்டாம்பூச்சி இனத்தை தொடர்பான உத்தரவு தற்போது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசித்து வரும் 30-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்களில் ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி இனமும் ஒன்று.  இந்த பட்டாம்பூச்சிகள், கூட்டமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த பட்டாம்பூச்சிகள் மஞ்சள் மற்றும் அடர்த்தியான அரக்கு கலரில் காணப்படும்.