சென்னை: தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை இனி ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை’ என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் வளர் 4.0 வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை, அமைச்சர் மனோ தங்கராஜ் சமீபத்தில், சட்டசபையில் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, தற்போது, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை இனி ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை’ என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் வளர் 4.0 வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. valar.tn.gov.in இணையதளத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தனர்.
தொழில்துறை, ஆராய்ச்சி மையங்கள், கல்வித்துறை மற்றும் நிபுணர்களை இணைக்கும் வகையில் வலைத்தளம் தொடங்கப்பட்டிருக்கிறது.