சென்னை:  தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47 சதவீதமாக உள்ளது என்றும்,வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது என்றும்  மாநில திட்டக்குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலத் திட்டக்குழு செயல்பட்டு வருகிறது. அரசின் சிறப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வது, பல்வேறு கருப்பொருள்களில் ஆய்வு மேற்கொள்வது மற்றும் மாநிலத்தில் நிலவிவரும் பல்வேறு சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் தகுந்த கொள்கைகளை வடிவமைப்பது உள்ளிட்டவை மாநிலத் திட்டக்குழுவின் செயல்பாடுகளாகும்.

இந்த குழுவினர் ஜனவரி 5ந்தேதி ஆய்வறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தலைமைச்செயலகத்தில் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், அக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவுக் கொள்கைகள் மற்றும் அறிக்கைகளை  சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். துணை முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம்

அதன் விவரம் வெளியாகி உள்ளது.அதன்படி,

தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47 சதவீதமாக உள்ளது என்று  தெரிவித்துள்ளது.

வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக 4.8 சதவீதமாக ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் வினியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியை தமிழ்நாடு விஞ்சியுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தேவைப்படுவோருக்கு 100 சதவீதம் வேலை வழங்கப்படுகிறது.

கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் 81.87 சதவீதம் ஆக உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகம்.

5 50 சதவீதத்திற்க்கு மேல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுடன் 100 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக 4.8 சதவீதமாக ஆக உள்ளது.

நிலையான வளர்ச்சிக்கான குறியீடில் தேசிய சராசரியை தாண்டி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அம்சங்களிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தேவைப்படுவோருக்கு 100 சதவீதம் வேலை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]