சென்னை: கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சியை வழங்கும் வகையில், தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று காலை தொடங்கியது.

சென்னை மக்களின் பெரும்  எதிர்பார்ப்பான ஏசி மின்சார ரயில் சேவை இன்று காலை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு தொடங்கியது.  இது சென்னை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரயில் சேவை  இன்று காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கிய மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

தற்போது,  சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையே, கோடை காலத்தில் வெயிலால் பயணிகள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

சென்னை மற்றும் புறநகர்  மக்களின் போக்குவரத்து நெரிசலுக்கு பேருதவி செய்து வருவது மின்சார ரயில் சேவை. இதன்மூலம் பல லட்சம் பேர் பணி மற்றும் தொழில் நிமித்தமாக சென்னை வந்து செல்கின்றனர்.  மேலும், சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. இதுமட்டுமின்றி போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை தவிர்க்க முடியாது.

இந்த நிலையில், சென்னை மக்களின் கோரிக்கையை தெற்கு ரயில்வே நிறைவேற்றி உள்ளது.  சாதாரண மின்சார ரெயிலுக்கு பதிலாக முழுவதுமாக ஏ.சி. பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்களை தயாரித்து பயன்படுத்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டு சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில், இன்று முதன்முதலாக மின்சார ரயில் சேவை தொடங்கி உள்ளது.

அதன்படி முதல் ரெயில் சேவை இன்று காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கியது. இந்த ரெயில் துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.

மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

[youtube-feed feed=1]