சென்னை: புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள  அரசு பல் மருத்துவக் கல்லூரியை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஏற்கனவே சென்னையில் மட்டும் பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட மாநிலத்தின் 2-வது பல் மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.