சென்னை: 
வம்பர் இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கொரோனா தடுப்பூசி முகாம்களை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், நவம்பர் மாத இறுதிக்குள் நூறு சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,  தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 73 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 87 சதவிகிதம் முதல் தவணையும், 48 சதவிகிதம் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் கூறினார்.