சென்னை: தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வான நவம்பர் 9ந்தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு, காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்காத நிலையில், காவல்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் தேவைப்படும், 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளது. தகுதி உடையோர், நாளை ( ஆக.22) முதல் செப். 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுவர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ.18,200 – 67,100/- வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
