கொச்சி:
கோழிக்கோடு விமான விபத்தில் தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் போயிங் விமானம், நேற்றிரவு வந்தது.இதில், 174 பயணியர் உட்பட, 191 பேர் இருந்தனர். இந்த விமானம், மலப்புரம் மாவட்டம், கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில், நேற்று இரவு, 7:40 மணிக்கு தரைஇறங்கியது; அப்போது, விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில்இருந்து விலகி, பள்ளத்தில் விழுந்து, இரண்டாக பிளந்தது.
இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி டுவிட்டரில் கூறியது, நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. மீட்பு பணிகள் நிறைவடைந்தன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து முறையான விசாரணை நடத்த விமான விபத்து தொடர்பான (ஏ.ஏ.ஐ.பி.)விசாரணை குழுவினர் இரண்டு பிரிவுகளாக இன்று கோழிக்கோடு சென்று விசாரணையை துவக்கி முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு ஷாலா ஷாஜகான் ஆகிய 3 பேர் தமிழர்கள் சுற்றுலாவுக்காக துபாய் சென்ற போது ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டிருந்தனர்
இவர்களது நிலை குறித்து மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபால கிருஷ்ணன் தெரிவிக்கையில், கோழிக்கோடு விமான விபத்தில் தமிழக பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்றார்.
கோழிக்கோடு விமான விபத்தில் இதுவரை 18 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது,