சென்னை: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தொற்று பாதிப்புக்கு பொதுமக்கள் மட்டுமின்றி, மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள்  மட்டுமின்றி, அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.
ஏற்கனவே அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் உள்பட பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தற்போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
[youtube-feed feed=1]