சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம் – கர்நாடகா இடையிலான அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்திற்கான தடையை தமிழக அரசு நீக்க மறுத்து வந்தது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் தமிழகம் – கர்நாடகா மாநிலம் இடையே அரசு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது. இதனால் தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.