சென்னை: தமிழ்நாடு 4.26 லட்சம் கூடுதல் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும் என மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துஉள்ளார். அதுபோல, நாளைக்குள் தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்பு ஜூன் 4 அன்று ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் பற்றாக்குறை ஏற்பட்டதும் குறைந்தது. பின்னர் தமிழகஅரசு எடுத்த முயற்சி காரணமாக தடுப்பூசி கூடுதலாக மத்திய அரசிடம் இருந்து பெற்றப்பட்டது. மேலும் தமிழகஅரசும் நேரடியாக கொள்முதல் செய்தது. இதையடுத்து, கூடுதல் தடுப்பூசி ஒதுக்கக்கோரி மத்தியஅரசுக்கு தமிழகஅரசு அழுத்தம் கொடுத்து வந்தது. இதன் காரணமாக தடுப்பூசிகள் உடடினயாக வந்தன. இதனால் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து. இடையில் மேலும் பற்றாக்குறை ஏற்பட்டதால் 3 நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது.
அதையடு;தது, மத்தியஅரசிடம் இருந்து 3.06லட்சம் தடுப்பூசிகள் வரப்பெற்றன. இதைக்கொண்டு ஜூன் 10ந்தேதி 2,327 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறையைத் தொடர்ந்து தமிழகத்திற்கு மையத்தின் விநியோகத்திலிருந்து கூடுதலாக ரூ .4.26 லட்சம் கிடைக்கும் எ;னறும், இவை 1.26 லட்சம் கோவாக்சினாகவும், 3 லட்சம் கோவிஷீல்டாகவும் இருக்கும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனர் செல்வவிநாயம் தெரிவித்து உள்ளார்.
தடுப்பூசி குறித்து செய்தியளார்களிடம் கூறிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழ்நாட்டிற்கு இதுவரை 1 கோடி 2 லட்சத்துக்கு 49 ஆயிரம் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. இதுவரை 97 லட்சம் 65 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள 85 ஆயிரம் டோஸ் தமிழ்நாடு முழுக்க அனுப்பப்பட்டுள்ளது.
இது போக 3 லட்சத்து 65 ஆயிரம் கூடுதலாக இன்று வந்துள்ளது. இதுவும் தமிழ்நாடு முழுக்க அனுப்பப்படும். நாளை மாலையே தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என்று தெரிவித்தார்.