சென்னை: ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதலில் இறந்து போன தமிழக வீரருக்கு இரங்கல் தெரிவித்தும், 20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான இவர் மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு பலரும் தங்கள் வீரவணக்கத்தை, இரங்கல் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவ வீரரின் மரணத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தெரிவித்து உள்ளார் . மேலும் இறந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கபடும் எனவும் அறிவித்துள்ளார்.