தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஷாட் கன் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணிக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரித்வி ராஜ் தொண்டைமான் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.