சென்னை: தலைமைச் செயலகப் பணியாளர்களை “முன்களப் பணியாளர்கள்” என அறிவிக்க வேண்டும் தலைமைச் செயலகப் பணியாளர் சங்க தலைவர் செ.அந்தோணி பீட்டர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

தமிழமெங்கும்COVID-19 தொற்று அதிதீவிரமாகப் பரவிவரும் வேளையில், தமிழ்நாடு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிக்கான அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. இடநெருக்கடி அதிகமாக உள்ள தலைமைச்செயலகத்தில் gணியாளர்களுக்கிடையே சமூக இடைவெளியை பின்பற்றுவது  என்பது இயலாத காரியமாக உள்ளது. மேலும், தலைமைச்செயலகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு COVID-19 தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில், அவ்வெண்ணிக்கை 400-ஐ தாண்டி விட்டது. மேலும், கடந்த வாரத்தில் மட்டும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஐந்து (5) பணியாளர்கள் CoVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதில் வேதனைக்குரியது என்னவென்றால், தீவிர தொற்றால் பாதிப்படைந்த தலைமைச் செயலகப் பணியாளர்கள் பலர் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் நாள்தோறும் அல்லல் படுகின்றனர். எனவே, COVID-19 தொற்று அதி தீவிரமாகப் பரவிவரும் இக்காலக்கட்டத்தில் பணியாளர்களின் உயிரையும், உறவுகளையும் காக்கும் விதமாக கீழ்க்கண்ட அறிவிப்புகளை உடனடியாக வெளியிடும்படி தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

1) நாடெங்கும் COVID-19 தொற்று பரவ ஆரம்பித்த காலத்திலிருந்தே முன்களப் பணியாளர்களுக்கு இணையாக தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்களும் தொடர்ந்து அரசுப் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு வருவதால் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்களை “முன்களப் பணியாளர்கள்” என அறிவிக்க வேண்டும்.

2) COVID-19 தொற்று பரவல் விகிதம் குறையும் வரை, தலைமைச் செயலகம் 50% சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்பதற்கு மாற்றாக தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தியாவசிய துறைகளிலுள்ள (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிதித்துறை, மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ) முக்கியமான பிரிவுகள் மட்டும் சுழற்சி அடிப்படையில் குறைந்த அளவில் பணியாளர்களுடன் (Including officers) மட்டும் இயங்க ஆணையிட வேண்டும்.

3) தலைமைச் செயலகத்தில் நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் வாரந்தோறும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து துறைகளிலும் மருந்து தெளிக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும், நோய்த தொற்று குறையும் வரையில் அத்தியாவசியம் தவிர்த்து வெளியாட்கள் தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும் உள்பட 8 கோரிக்கைகள் வைத்துள்ளார்.