சென்னை:
மிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் வரும் எட்டாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்தவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது ஷிப்ட் முறையில் அல்லது சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொற்று அபாயம் இருக்காது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் வரும் எட்டாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.