அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் 5-வது இடத்தில் தமிழகம்

Must read

புதுடெல்லி:
திக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

 ஜனவரி 9 முதல் 22 வரைக்குமான 15 நாட்களில் உத்தர பிரதேசத்துடன் கேரளாவை ஒப்பிடும் போது, அங்கு அதே காலக்கட்டத்தில் 16.7 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 0.3% பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. 12.3 லட்சம் பரிசோதனைகளுடன் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது. 11.4 லட்சம் பரிசோதனைகளின் மூலம் பீஹார் மூன்றாமிடம், டில்லியில் 8.9 லட்சம் பரிசோதனைகள், அடுத்ததாக தமிழகத்தில் 7.5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் அதை விட 30 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கூட மஹாராஷ்டிராவை விட 20 லட்சம் பரிசோதனைகள் கூடுதல் ஆகும். இங்கு இதுவரை 1.6 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆந்திராவில் 1.3 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவில் பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் பாதிப்பு எண்ணிக்கை உயரும் என்பது தெரியவருகிறது.

More articles

Latest article