சென்னை: தொடர் மழை காரணமாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 26 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால், சென்னை, புறநகர் பகுதிகளில் மழை நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதையடுத்து, நேற்று இரவி சென்னை, திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால், இதுவரை 26 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர் மழை காரணமாக அரியலூர், விழுப்புரம். நாகை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
மழை காரணமாக தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை –
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.