சென்னை:

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் மார்ச் 28-ம் தேதி நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15-ம் தேதி கடைசி நாளாகும்.

பிப்ரவரி 22-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள். வாக்குப்பதிவு மார்ச் 28ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.