சென்னை:
சென்னை மாநகர காவல்ஆணையர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபியாக பதவி ஏற்ற ஏ.கே.விஸ்வநாதனுக்கு, கூடுதலாக மின் பகிர்மான கழக விஜிலென்ஸ் டி.ஜி.பி பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் தமிழகத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தமிழக அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி பதவி வழங்கப்பட்டது. தற்போது அந்த பதவியில் அவர் இருந்து வருகிறார்.
இந்தநிலையில், ஏ.கே.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இந்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ளார்.