சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவும், மேற்கு வங்க மாநிலத்தில் 3வது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்ற காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி,
தமிழகத்தில் 39.61 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. இது மற்ற மாநிலத்துடன் ஒப்பிடும்போது சுமார் 10 சதவிகிதம் குறைவாகவே பதிவாகி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம். 047. வாணியம்பாடி 47 % 048. ஆம்பூர் 47.59% 049. ஜோலார்பேட்டை 47.8 % 050. திருப்பத்தூர் 43% சராசரி வாக்குப்பதிவு 46.36% ஆக உள்ளது.
புதுச்சேரியில் 53.80 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.
கேரள மாநிலத்தில் 47.30 சதவிகித வாக்குகளும்,
அஸ்ஸாம் மாநிலத்தில் 53.23 சதவிகித வாக்குகளும்,
மேற்கு வங்க மாநிலத்தில் 53.89 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளன.