சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
சென்னையில் முகாமிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் செய்தியாளர்கள சந்தித்ததார். அப்போது, “வரும் தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து செயல்படும்” எனக்கூறி கூட்டணியை உறுதி செய்ததார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் ஏற்கனாவே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக தொடரும் நிலையில், அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி சேரப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
இந்த நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற களப்பணி ஆற்றி வரும் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், இடையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா மற்றும் சிலரின் ஊழல் குறித்து விமர்சித்ததால், அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்து.
இதைத்தொடர்ந்து, மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முடிவு செய்து, காய்கள் நகர்த்தப்பட்டு வந்தன. கூட்டணியில் இருந்து விலகி சென்ற அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர, பாஜக முயற்சித்து வந்தது. இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள், நிபந்தனைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வந்தன.
இதைத்தொடர்ந்து, சென்னை வந்துள்ள அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். நேற்று செய்தியாளர்களை கூட்டாக அண்ணாமலை, இபிஎஸ், அமித்ஷா ஆகியோர் அதிமுக பாஜக கூட்டணி என்பதை உறுதி செய்து அறிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைவருக்கும் பங்குனி உத்திர நல்வாழ்த்துக்கள். வரும் தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து செயல்படும். தேசிய அளவில் மோடி தலைமையில் இந்த கூட்டணி அமைந்துள்ளது. எடப்பாடி தலைமையிலும் இந்த கூட்டணி அமைந்துள்ளது.
1998ஆம் ஆண்டு முதல் அதிமுக, பாஜக கூட்டணி தொடங்கியது. ஒரு காலத்தில் பாஜக அதிமுக கூட்டணி 31 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. வருகின்ற தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக, பாஜக இணைந்துதான் ஆட்சி அமைய உள்ளது தமிழ்நாட்டில். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி அமையப் போக உள்ளது. வெற்றி பெற்ற பிறகு பாஜக உறுப்பினர்கள் அமைச்சர் ஆவார்கள் என்றார்.
கூட்டணி தொடர்பாக, அதிமுக எந்த வகையான டிமாண்டும் பாஜகவிடம் வைக்கவில்லை. அமமுக, அதிமுக இணையுமா என்ற கேள்விக்கு, அதிமுகவின் உட்கட்சி பிரச்னையில் நாங்கள் தலையிட போவதில்லை என பதிலளித்தார். கூட்டணியில் யார், யாருக்கு எத்தனை தொகுதி என்பதும் வெற்றி பெற்ற பிறகு ஆலோசனை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தவெக தலைவர் விஜய்யும் கூட்டணி ஆட்சி என கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இவர் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்பது உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது. அதுபோல தேமுதிக, பாமக எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்பதும் இன்னும் முடிவாகவில்லை. இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
விரைவில் அடுத்தடுத்து கூட்டணி பேரங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.