சென்னை: உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருந்தாலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து வருகிறது. நேற்று (5ந்தேதி) மட்டும்  புதியதாக  820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,22,370  ஆக உயர்நதுளளது.

தற்போதைய நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக 7,808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளது.

அமைச்சர் காமராஜ் கடந்த சில நாட்களாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்   சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

[youtube-feed feed=1]