சென்னை: தமிழ்நாட்டில்  நடப்பு ஆண்டுக்கான அரசு மற்றும்தனயிர்  மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,   நடப்பு கல்வி ஆண்டில் 851 எம்.பி.பி.எஸ் மற்றும் 38 பி.டிஎஸ் படிப்புக்கான இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

நீட் சர்ச்சை முடிந்து,  நாடு முழுவதும்  இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்குகிறது.   அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தொடங்க தொடங்க உள்ளது. மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் 19-ம் தேதி வெளியாகும் என்றும்  அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்டு 8ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள  85% இடங்களுக்கான கலந்தாய்வு ஆக.21இல் தொடங்கும்.

தமிழ்நாட்டில் உள்ள 36 மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசு ஒப்படைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு, 851 எம்.பி.பி.எஸ் இடங்கள், 38 பி.டி.எஸ் இடங்களை மருத்துவ சேவைகள் இயக்குநரகம், கவுன்சிலிங் நடத்தும் மத்திய குழுவிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்கும்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்துடன் இணைந்த கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள், மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் 3 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான சேர்க்கைக்கு 4 சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் நடைபெறும்.

இந்த கவுன்சிலிங் – A, A1, B, C, D – என 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் A மற்றும் C என்பது அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் 85% இடங்களைக் குறிக்கிறது. B மற்றும் D என்பது சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைக் குறிக்கிறது. A1 என்பது சென்னை கலைஞர் கருணாநிதி நகர் இ.எஸ்.ஐ.சி (ESIC) மருத்துவக் கல்லூரி என்பதைக் குறிக்கிறது.

கட்டணம் அறிவிப்பு

மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில்  சேரும்  மருத்துவ  மாணவர்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 அரசு மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் ரூ18,073 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.16,073

இ.எஸ்.ஐ.சி (ESIC ) கல்லூரிக்கு ரூ.1 லட்சம்.

சுயநிதி கல்லூரிகளில் அரசு இடங்கள் ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை இருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு ரூ.5.40 லட்சம் மற்றும்

சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் ரூ.2.50 லட்சம் வசூலிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மேலாண்மை இடங்கள், என்.ஆர்.ஐ இடங்கள், காலாவதியாக இருக்கும் என்ஆர்ஐ இடங்கள் மற்றும் சிறுபான்மையினர் இடங்களுக்கான கட்டணக் கட்டமைப்பை கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.

அதன்படி மேலாண்மை ஒதுக்கீடு இருக்கைக்கு, கல்வி கட்டணம் ரூ.13.50 லட்சம், என்.ஆர்.ஐ (NRI) இடங்களுக்கு ரூ.24.50 லட்சம் மற்றும் என்.ஆர்.ஐ (NRI) காலாவதியான இடங்களுக்கு ரூ.21.50 லட்சம். கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.53,000 என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மூன்று அரசு தனியார் பல்கலைக்கழகங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.16.20 லட்சம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், என்.ஆர்.ஐ (NIR) இடங்களுக்கு ரூ.29.40 லட்சமும், என்.ஆர்.ஐ (NRI) காலாவதியான இடங்களுக்கு ரூ.25.80 லட்சமும் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்டு 21ந்தேதி முதல் மருத்துவக் கலந்தாய்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..