சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தபடி, 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். அதில்,  உள்ளாட்சித் தேர்தலை குறித்த நேரத்தில் நடத்தாததால் தமிழகத்துக்கு ரூ. 2,577 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியின் நிதி நிர்வாக சீர்கேடு குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கைவெளியிட்டு உள்ளது. அதில்,  மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை, அதற்கானகாரணம் என்ன என்பது குறித்து விளக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர்,  கடந்த  5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்க தமிழ்நாட்டின்  வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மேலும்,  மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். இந்தியாவில்  வேறு எந்தவொரு மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளதுடன், அதிமுக அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதல், தமிழக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்க விலை என்று குற்றம் சாட்டினார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வராத அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக,ரூ.2577 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றும் நிதி அமைச்சர் தியாகராஜன் விளக்கினார்.