சென்னை: நாளை சட்டமன்ற கூட்டத் தொடர்  தொடங்க உள்ள நிலையில்,  இன்று  சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தலைவர் நடைபெற உள்ளது. இதில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்படும்.

இந்த கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியபடி,  காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பபேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர்  ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

பின்னர்,   மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

பொதுவாக பேரவை 6 மாதங்களுக்குள் ஒருமுறையாக கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதனால்,  பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்து 6 மாதங்கள் ஆகும் நிலையில்,  நாளை மீண்டும் பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது.

நாளை கூட்டத்தொடர் தொடங்கியது சபாநாயகர் அப்பாவு  மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கற்குறிப்பு வாசிப்பார்.. மேலமு,  வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் கரூர் தவெக தலைவர் விஜய்  சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து,   அன்றைய அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த நிலையில், , சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.  இந்த கூட்டம்  சபாநாயகர் அறையில் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. சட்டசபை கட்சிகளின் தலைவர்கள், கொறடாக்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த ஆய்வு கூட்டத்தில், வரும்,  15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் அவை நடைபெறும் வகையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்படும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 6 மாதங்களில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இந்த கூட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.