14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சி நிரல் வெளியாகி உள்ளது.
அதன்படி, 14.9.2020 திங்கட்கிழமை அன்று இரங்கல் குறிப்புகள் நடைபெறுகிறது .
இரங்கல் குறிப்புகள் :
சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து நடைபெறும்.
இரங்கல் தீர்மானங்கள் :
1.திரு. பிரணாப் முகர்ஜி, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அவர்கள் மறைவு குறித்து நடைபெறவுள்ளது.
2.திரு. ஜெ. அன்பழகன் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் அவர்கள் மறைவு குறித்து
3. திரு. எச். வசந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர் அவர்கள் மறைவு குறித்து
4.கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து அரசினர் அலுவல்கள்.
15.9.2020 செவ்வாய்க்கிழமை அரசினர் அலுவல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16.9.2020 புதன்கிழமை
(1) 2020-2021-ஆம் ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல்.
(2) 2020-2021-ஆம் ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி)
(3) 2020-2021-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்தல் மற்றும் ஆய்வு செய்து நிறைவேற்றுதல் (விவாதமின்றி)
(4) சட்டமுன்வடிவு கள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றதலும்
(5) ஏனைய அரசினர் அலுவல்கள் பேரவை வழக்கம்போல் காலை 10.00 மணிக்குக் கூடும் என் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.