சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவித்தபடி இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியத. இதையடுத்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதங்களுக்கான இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவை நிகழ்வை புறக்கணித்தார். மேலும் கள்ளக்குறிச்சி சம்வம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி, மாஞ்சோலை விவகாரம் குறித்து ச ட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் உயிரிழந்த விவகாரம் பெரியளவில் சட்டசபையில் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மானியக் கோரிக்கை தொடர்பான சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில், அவை நடவடிக்கையை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின், குடும்பத்தினரை நேரில் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்று காலை வழக்கமான முறையில் காலை 9.30 மணிக்கு தொடங்கியரது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்பட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். சபையில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
மறைந்த முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி மற்றும் , குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இறப்பு, மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரம் ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என சபாநாயகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.