ராஜஸ்தான்: அகில இந்திய கபடி போட்டியில் கலந்துகொள்ள ராஜஸ்தானிற்கு சென்ற தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் நடைபெறும் இந்திய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்பதற்காக தென் இந்தியாவில் இருந்து 4 அணிகள் சென்றுள்ளன. எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டி, வேல்ஸ் யுனிவர்சிட்டி உள்பட தனியார் பல்கலைக்கழகம் சார்பாக கல்லூரி மாணவர்கள் சென்று இருந்தனர்.
போட்டியின் போது தமிழ்நாட்டு வீரர்களுக்கு சரியான பாயிண்ட்களும், போனஸ்களும் வழங்கப்பட வில்லை என தமிழக வீரர்கள் குற்றம் சாட்டினிர். இது குறித்து தமிழ்நாட்டு வீரர்கள் கேள்வி எழுப்பிய போது இரு தரப்புக்கும் இடையே தகராறு எழுந்தது.
இந்த போட்டிகளை காண பிரபல நடிகர்கள் வந்திருந்த நிலையில், முன்னிலையில் தமிழக வீரர்களையும், பயிற்சியாளர்களையும் ராஜஸ்தான் வீரர்கள் தாக்கி உள்ளனர்.
தமிழ்நாட்டு வீரர்கள் தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்வது குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]