சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்து உள்ளார். அதில், உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது என பாராட்டி உள்ளார்.

ஏற்கனவே தமிழக வீரர் ஆனந்த் தான், இந்தியாவிலேயே முதன்முதலாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற நிலையில், தற்போது   இரண்டாவது வீரராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் குகேஷ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில்  சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.  14ஆவது சுற்றில் டிங்லீரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில்,  18 வயதில் மிக இளைய உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” 18 வயதில் மிக இளைய உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷிற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்களது குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது.உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது” எனவும் ஸ்டாலின் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முன்னதாக,  சிங்கப்பூரில் நடைபெற்ற  உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகளில், இந்திய வீரர்கள் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ள நிலையில்,  14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்  இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வந்தனர்.

முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றனர்.   அதனை தொடர்ந்து நடைபெற்ற 4-வது சுற்றிலிருந்து 10-வது சுற்று வரை சமநிலையிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து,  11-வது சுற்று வரும் போது மூளைக்கு அதிகமாக வேலை கொடுத்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில்,  இந்த போட்டியில் யார் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை  வெல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், தமிழக வீரர் குகேஷ்  வெற்றிபெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து அடுத்த சுற்றான 12-வது சுற்றிலும் வெற்றிபெற்றார். அதன்பின் நேற்று நடைபெற்ற 13-வது சுற்றில் இருவரும் தலா 6.5 என்ற புள்ளியை பெற்றுக்கொண்ட நிலையில், 13-வது சுற்றுமே சமநிலையில் தான் முடிந்தது. எனவே, இருவரும் சமநிலையான புள்ளிகளை பெற்றுள்ள காரணத்தால்  14-வது சுற்றில் வெற்றிபெறுபவர் தான் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

14ஆவது சுற்றில் போட்டி தொடங்கி 2 மணி நேரம் முடிவடைந்துள்ள நிலையில் இந்த சுற்றும் டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த  காரணத்தால் நாளை டை பிரேக்கர் முறைப்படி சுற்று நடைபெறவுள்ளது எனவும் சொல்லப்பட்டது. இந்த சூழலில் திடீரென,  14ஆவது சுற்றில் டிங்லீரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.