சென்னை: சென்னையில் இன்று  பகலில் மிதமான மழையும்,  இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்களான பிரதீப் ஜான், பரத் தெரிவித்து உள்ளனர். அக்டோபர் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் ஹாட் ஸ்பாட் சென்னை என எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டில்  வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே மழை தொடங்கி உள்ளது. இன்று சென்னை மற்றும் புறநகர், கோவை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வரும்  , அக்டோபர் 16ம் சென்னை உள்பட 4 மாவட்டங்களில்  அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனியார் வானிலை ஆய்வாளர்ன  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான்  வெளியிட்டுள்ள பதிவில்,  வட தமிழகத்தின் மேல் மேகப்பந்து உருவாகி வருவதால் சென்னையில் மழை பெய்து வருகிறது. எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்று பகல் நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்யும். இரவு முதல் அதிகாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று பகலில் விட்டு விட்டு மழை பெய்யும் என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் சென்று வரலாம். மிக கனமழைக்கான முக்கிய தேதிகள் வந்து கொண்டிருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 16-ம் தேதி சென்னை கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 16,17ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோல உங்கள் வெதர்மேன் பரத் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் சென்னை முதல் பாண்டிச்சேரி வரை அக்டோபர் 14 முதல் 17 வரை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னறிவிப்பு இருந்தால், வரும் திங்கட்கிழமை அக்டோபர் 14 ஆம் தேதி மழை மற்றும் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

காற்றழுத்த தாழ்வு பகுதி அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதி நமது கரையை நெருங்கும் போது. பீதி அடைய தேவையில்லை; இது எங்களின் முதல் வானிலை நிகழ்வாகும், மேலும் அமைப்பின் நிலையைப் பொறுத்து மழைப் பட்டைகள் முழுவதுமாக கடலுக்கு மேல் நிலைத்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, விஷயங்கள் எவ்வாறு வெளிவருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.