சென்னை: தமிழக சட்டமன்றப்பேரவையின் ஆயுட்காலம் மே 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி உள்ளது. அதன்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுனில அரோரா, கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம் என்றவர் ஏற்கனவே கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் தேர்தலை நடத்தியதை சுட்டிக்காட்டினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் உடனே அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 மாநிலங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி உள்ளது. அதன்படி இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது..
[youtube-feed feed=1]