சென்னை: மாநிலத்தில் வளர்ச்சி 11.46% லிருந்து அதிமுக ஆட்சி 4.4% ஆக சரிந்துவிட்டது என திமுக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றிய 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து உள்ளது என்றும், எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் இழப்பு இல்லை என்று தெரிவித்துதடன, 2016 -21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.

மேலும், 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரம் கோடியாகவும், 2016-21ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் பொதுக்கடன் 26.69 சதவீதமாக உள்ளது.

இதுபோன்று 2021 – 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது இந்தியாவில்  வேறு எந்தவொரு மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை என்றார்.

தமிழகத்தில் மொத்த உற்பத்தி 8.7 சதவீதமாக குறைந்துள்ளது அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் மாநில வருவாய் 4.4 சதவீதமாக சரிந்துள்ளது. இதனால் மாநிலத்தின்  வளர்ச்சி 11.46% லிருந்து அதிமுக ஆட்சியில் 4.4% ஆக குறைந்துள்ளது என்று கூறினார்.

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது என்று கூறிய அமைச்சர்,  சரியான நபர்களிடம் இருந்து வரி வசூலித்து கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார்.

“வரியே வசூலிக்காவிட்டால் ஆட்சி எப்படி நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், சரியான நபர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய அரசின் நோக்கம்,அரசாங்கத்தின் திறமை. எனவே  சரியான வரியை வசூலித்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், ஜீரோ வரி என்பது அர்த்தமற்றது. ஏனெனில்,பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு மட்டுமே ஜீரோ வரி முறை பயன்தருகிறது. மாறாக,ஏழைகளுக்கு பலன் அளிக்கவில்லை என்று கூறிய அமைச்சர்,  மத்தியஅரசு  GST, பெட்ரொல் வரி என நேரடி வரியை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்துவருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.