திருவள்ளுர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு  திறக்கப்பட்டு வந்த உபரி நீர் திறப்பு 200 கன அடியில் இருந்து 1800 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின்  கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது.

முதற்கட்டமாக  30 கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது.

சென்னை குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ள பூண்டி அணை முழு கொள்ளவை நெருங்கி உள்ளது. இந்த நிலையில், தற்போத  வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக எச்சரிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கான  790 கனஅடியானது நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில், மேலும் மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரிக்கும் கூடும் என்பதால் அணை பாதுகாப்பு கருதி நேற்றைய தினம் 200 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது.

தற்போது புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.  இன்று காலை 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு 10 மணியளவில் 1,300 கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக 30 கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள எச்சரிக்கையானது விடுக்கப்பட்டது.

அதன் கொசஸ்தலை ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ள கிராமங்களான நந்தனம், தாம்பரம், எண்ணூர்  உள்பட  30 கிராம மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  இந்த ஆற்று பகுதியில் இறங்கவோ, குளிக்கவோ, துணிதுவைக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி  35 அடி நீர்மட்ட கொண்ட இந்த நீர்தேக்கத்தில் தற்போது 33.96 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது.