சென்னை:
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் (பொறுப்பு) புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

கடந்த காலங்களில் நாம் கற்று அறிந்த அனுபவங்களை, புதிய ஆண்டின் விடியலில் நமது நாட்டை உலக அரங்கில் வல்லமை பெற்ற நாடாக மாற்றுவதற்கும்,
முன்னேற்றமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஏற்ற வகையில் திட்டமிடவேண்டும்.
திறந்த மனதோடு நாம் புத்தாண்டை வரவேற்று, கலாசாரம் மற்றும் சகோதர உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு பணிகளை ஊக்குவிப்புடன் செய்து நல்லிணக்க இந்தியாவை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel